Pages

Sunday, September 9, 2012

மச்ச சாஸ்திரம்

பெண்களுக்கான மச்ச பலனகள்

                 பெண்களுக்கு மச்சம் எங்கே இருக்கிறது? அதை வைத்து அவர்களின் குணநலங்களை கண்டறிய முடியுமா? முடியும் என்றே சாமுத்ரிகா லட்சணம் சொல்கிறது. இதன் ஒரு கூறான அங்க சாஸ்திரத்தில் மச்சங்களை பற்றிய விவரங்களும் அதன் பலன்களும் மச்ச ஜாதகம் என தனியே குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது ஒரு பெண்ணுக்கு உடலில் எங்கெங்கு மச்சங்கள் இருக்கின்றன என்பதை வைத்தே அந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்கும், அந்தப் பெண்ணின் குணநலன் எப்படி இருக்கும் என்று சொல்லக்கூடிய ஒருவகை மச்ச ஜோதிடம் இது. மச்சம் என்பது மருத்துவரீதியாக இன்னும் புரியாத புதிர்தான். ஆனால் ஜாதக ரீதியாக ஒரு மச்சம் பெண்ணின் உடலில் எந்த பாகத்தில் இருக்கிறது என்பதை வைத்து மச்ச சாஸ்திரம் மச்ச பலன்களை தருகிறது.
                சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம்.  ஆய கலைகள் 64-ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம்.

                 நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.

 நெற்றியில் மச்சம் இருந்தால் அந்த பெண் நல்ல புகழ் பெறுவாள். தீட்சை பெற்று நல்ல கீர்த்தியுடன் சிறந்து விளங்குவாள்.

புருவத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணுக்கு மிகவும் நல்லகுணம் . உயரிய அந்தஸ்து அடைவாள்.\

காதில் மச்சம் இருந்தால் நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு ஆண் வாரிசு, அதாவது மகன் பிறப்பான்.
மூக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சகல சவால்களிலும் வெற்றி பெறுவாள்.
.

உதட்டில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சாந்த குணம் கொண்டவளாய் இருப்பாள். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம் ஆகியவை அந்தப் பெண்னை தேடி வரும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் நிறைய பொய் சொல்வாள்.

தாடையில் மச்சம் இருந்தால் உயர்ந்த அந்தஸ்து பெறுவாள் அந்தப் பெண்.
கழுத்தில் மச்சம் இருந்தால் அந்தப் பெண்ணின் சந்ததி நன்கு  விருத்தியடையும்.

மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, தாம்பத்ய சுகம் ஆகியவை பெற்று சிறந்து விளங்குவாள்.

ஸ்தனத்தில் (மார்பகத்தில்) சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவாள்.

ஸ்தனத்தில் (மார்பகத்தில்) கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு என சாஸ்திரம் சொல்கிறது.

உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி என்பது மச்ச சாஸ்திரத்தின் ஜோதிடம்.

முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டக்காரியாக திகழ்வாள் பெண்.

வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு, சொல்வத்தில் பஞ்சமில்லை.

தொப்புளில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி. உணவு பஞ்சமில்லை.

பெண் குறியில் மச்சம் இருந்தால் நிறைவான போக சுகம் தருபவள்.

பெண் குறி வலது பக்கம் உயர்ந்து இருந்தால் பெண் குழந்தை அதிகம் பிறக்கும்.

பெண் குறி இடது பக்கம் உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை அதிகம் பிறக்கும்.

பெண் குறி சமமாக உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை, பெண் குழந்தை இரண்டும் பிறக்கும்.

வலது தொடையில் மச்சம் இருந்தால் உயர்வு.

இடது தொடையில் மச்சம் இருந்தால் துரதிஸ்தம்.

வலது முழங்காலில் மச்சம் இருந்தால் சதா தீர்தயாத்திரை.

இடது முழங்காலில் மச்சம் இருந்தால் இறை நம்பிக்கை அற்றவர்.

பாதத்தில் மச்சம் இருந்தால் ஆச்சர அனுஸ்டானம் உள்ளவள்.



ஆண்களுக்கான மச்ச பலன்கள்

புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள்
 

நெற்றியின் வலது புறம் – தனயோகம்
 

வலது புருவம் – மனைவியால் யோகம்
 

வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம்
 

வலது கண் – நண்பர்களால் உயர்வு
 

வலது கண் வெண்படலம் – புகழ், ஆன்மீக நாட்டம்
 

இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி
 

மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை
 

மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம்
 

மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
 

மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை
 

மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல்
 

மேவாய் (உதடுகளுக்கு மேல்) – செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்
 

வலது கன்னம் – வசீகரம், தயாள குணம்
 

இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு
 

வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம்
 

இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம்
 

காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம்
 

தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம்
 

கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
 

இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
 

வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
 

வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
 

அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை
 

புட்டம் – அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு
 

Tuesday, February 28, 2012

கர்ம வினைகளை கழிக்க எளிய வழி-


      நீ உண்மையிலேயே உலகிற்கு நன்மை / சேவை செய்ய விரும்புகிறாயா? அப்படி செய்ய முடியாமல் போனதிற்காக வருந்துகிறாயா? அப்படியானால் நீ எப்பொழுதும் நல்ல எண்ணங்களையே எண்ணி கொண்டிரு , அதாவது கஷ்டபடுகிறவர்களுக்கு என்னனென உதவிகள் தேவையோ அதை பற்றி எண்ணி கொண்டிரு
 .
     பிரதிபலன் கருதாமல் , நாம் உலகிற்கு செலுத்தும் ஒவ்வோர் நல்ல எண்ணமும் நமக்குள் சேகரித்து  வைக்கபடுகிறது அத்தகைய நல்ல எண்ணம் நமது கர்ம சங்கிலியை ( கர்ம வினையை ) இணைக்கும்  வளையம் ஒன்றை உடைத்தெறிகிறது
     மக்களுக்குள் மிகவும் துயவர்கழகும் வரை மேலும் மேலும் அது நம்மை தூய்மை படுத்திக்கொண்டே இருக்கிறது . தொடர்ந்து புனிதமான எண்ணங்களை சிந்தித்தபடி நன்மை செய்து கொண்டே இரு , தீய விஷயங்கள்  நமக்குள் தலைக்காட்டாதபடி அழுத்திவைக்க அதுதான் வழி .
           நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட ஒரு  காலத்திற்கு பிறகு சூட்சம தன்மை அடைகிறது , பின்பு அது வித்து வடிவத்தை பெற்று  மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சம உடலில் வாழ்கிறது  மீண்டும் சிறிது காலத்திற்கு  பிறகு அது வெளியே வந்து தனக்கு உரிய பலன்களை தருகிறது , இந்த பலன்களே மனிதனுடைய  வாழ்க்கையை தீர்மானிக்கிறது இவ்விதமே மனிதன் தனக்கு தானே வாழ்க்கையை உருவாக்கி கொள்கிறான் .

     உன்னுடைய ஒவ்வொரு நல்ல எண்ணமும் , செயலும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை  நிரந்திரமாக பாதுகாக்க தயராக இருக்கிறது என்பதை நீ எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்  உன்னால் முடிந்த வரை நல்ல எண்ணங்களையே எண்ணு, உலக நன்மையின் பொருட்டு அந்த எண்ணம் யாரால்  செயல்படுத்த முடியுமோ அவர்கள் மனதில் தோன்றி அது  (உன் எண்ணம்)  செயலுக்கு வந்து விடும், (செயல்படுதலை ) குறித்து வருந்தாதே .

                                                                                                                                              -விவேகானந்தர்