Pages

Sunday, December 1, 2013

இறைவனை ஆலயத்தில் செய்யத் தகாதவை


 1. பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில், இறைவனை ஆலயத்தில் வந்து  தரிசிப்பது.

2. பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்வது
 

 3. வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்வது
 

4. ஒருவரைக் கெடுப்பதற்காக சுவாமியை வேண்டிக் கொள்வது
 

5. தம்பதிகளின் உடலுறுவுக்குப்பின் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் ப்ரவேசிப்பது
 

6. ஸ்த்ரீகள் ரஜஸ்வலையாகக்கூடிய நாட்களைக் கணக்கிட்டுக் கருத்தில் கொள்ளாது, அந்நாட்களில் ஆலயம் செல்லுதல்
 

7. மாதவிடாய்ப் பெண்டிருடன் பேசிக் கொண்டு இருந்தவரோ, அருகில் சென்றவரோ ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
 

8. மரணத்தினால் தீட்டு உள்ளவர்கள் ஆலயம் செல்வது
 

9. பிணத்தைப் பார்த்தவர்கள், பிணத்தோடு உடன் சென்றவர், மரணத்தினால் தீட்டு உள்ளவர்களைத் தீண்டியவர்கள் ஆகியோர் ஸ்நானம் செய்யாமல் 
ஆலயம் செல்வது.
 

10. மலஜலங்களை அடக்கிக் கொண்டு ஆலயம் செல்லுதல்.
 

11. மலஜலம் கழித்தபின் சுத்தி செய்துகொள்ளாமல் ஆலயம் புகுதல்.
 

12. கருப்பு வஸ்திரம் தரித்துக் கோயிலுக்குச் செல்லுதல், பூஜை செய்தல்
 

13. கோபத்துடன் ஆலயம் செல்லுதல், பூஜை செய்தல்
 

14. துவஜஸ்தம்பமும் பலிபீடமும் கடந்து உள்ளே சென்றபிறகு, எங்கேயாவது கீழே விழுந்து நமஸ்காரம் செய்தல்
 

15. பகவானுக்கும் நந்திக்கும் இடையே குறுக்காக நடத்தல் அல்லது பிரதக்ஷிணம் செய்தல்
 

16. ஈர வஸ்திரங்களையோ, விழுப்பு வஸ்திரங்களையோ அணிந்து ஆலயம் செல்லுதல்
 

17. சாப்பிட்டுவிட்டுக் கோயிலுக்கு வழிபாட்டிற்காகச் செல்லுதல்
 

18. இடுகாடு அல்லது சுடுகாடு சென்று வந்த நாட்களில் ஆலயம் செல்லுதல்
 

19. புலாலோ, வெங்காயம், பூண்டு போன்றவற்றையோ உண்ட நாட்களில் திருக்கோயில் செல்லுதல்
 

20. கால் அலம்பாமல் ஆலயத்திற்குள் அடியெடுத்து வைத்தல்
 

21. மூர்த்திகளைத் தொடுதல்.
 

22. மூர்த்திகளின் அருகில் கற்பூரம் ஏற்றுதல், அல்லது தீபம் ஏற்றுதல்
 

23. கோயில் உள்ளே தீபத்தினை விரலால் தூண்டுதல், கைகளைச் சுவரிலும் 
மற்றுள்ள இடங்களிலும் துடைத்தல்.
 

24. எச்சில் துப்புதல்
 

25. நைவேத்யம் ஆகும்போது பார்த்தல்
 

26. சிவ நிர்மால்யங்களை மிதித்தல் அல்லது தாண்டுதல்
 

27. விமானம், த்வஜஸ்தம்பம், பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை 
 மிதித்தல்
 

28. உடலின் மேல் பாகத்தை புருஷர்கள் மூடிச் செல்லுதல்
 

29. நெற்றிக்கு விபூதி இடாமை
 

30. சிகை (குடுமி) இல்லாமை
 

31. தலைமயிரை அவிழ்த்துத் தொங்கவிடுதல்
 

32. தலைமயிரை ஆற்றுதல்
 

33. மூக்கைச் சிந்துதல்
 

34. தும்முதல்
 

35. கோட்டுவாய் (கொட்டாவி) விடுதல்
 

36. வாயில் எதையேனும் அடக்கியிருத்தல்
 

37. பேசுதல்
 

38. வேகமாக வலம் வருதல்
 

39. தீபம் அணையும்படி மூச்சுக் காற்று விடுதல்
 

40. மற்ற ஆலயங்களை பற்றி இங்கு கூறுதல்
 

41. கை-கால்களை நீட்டிக் கொண்டு உட்காருதல்
 

42. படுத்தல் ,. உறங்குதல் ,. சிரித்தல் ,. அழுதல் ,. அடித்தல் ,
. சண்டையிடுதல் ,. எச்சில் துப்புதல் ,. மலஜலம் கழித்தல் ,
. விளையாடுதல்
 

43. விக்ரஹங்களுக்குப் பின்புறத்தைக் காட்டி நிற்றல்
 

44. தாம்பூலம் தரித்தல்
 

45. வாஹனத்தின் மீதமர்ந்தோ, பாதரøக்ஷயுடனோ ஆலயத்துள் செல்லுதல்
 

46. உற்சவ காலங்களில் விழாக்களைக் கண்டு களித்துவிட்டு, இறை வணக்கம் செய்யாதிருத்தல்
 

47. தெரிந்து தெரியாமலும் தகாதவற்றைச் செய்தல்
 

48. உடல் சுத்தம் இல்லாதபோது தொழுதல்
 

49. ஒரு கையை மட்டும் தூக்கிக் கும்பிடுதல்
 

50. அப்பிரதக்ஷிணமாகச் சுற்றுதல்
 

51. மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டி உண்ணல்
 

52. தின்பண்டங்களைச் சுவைத்துக்கொண்டிருத்தல்
 

53. பொய் பேசுதல் ,. உரத்துப் பேசுதல, வாதம் செய்தல்
 

54. எதையோ நினைத்து வருத்தத்துடன் அழுதல்
 

55. சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல்
 

56. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, தன்னை அணுகுபவர்க்கு அருள் புரிதல்
 

57. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, மற்றவர்க்குச் சாபம் அளித்தல்
 

58. ஆடவர் பெண்டிரை நோக்கியும், பெண்டிர் ஆடவரை நோக்கியும் கடும் சொற்களைக் கூறுதல்
 

59. கம்பளம் முதலியவற்றால் உடலை மறைத்துக் கொள்ளுதல்
 

60. நர ஸ்துதி செய்தல்
 

61. பிறரை இழிவு படுத்துதல்
 

62. அபானவாயு விடுதல்
 

63. அமங்கலச் சொற்களைக் கூறுதல்
 

64. வசதிகள் இருந்தும், அவற்றிற்கேற்ப சிறப்பான இறைப்பணிகளும் வழிபாடுகளும் செய்யாமல், நடுத்தரமான அல்லது அதற்கும் குறைவான வகையில் அவற்றைச் செய்தல்
 

65. கடவுளுக்கு நிவேதனம் செய்யப்படாததைப் புசித்தல்
 

66. அந்தந்தக் காலகட்டத்தில் விளையும் பழங்கள் போன்ற பொருள்களை இறைவனார்க்கு அளிக்காமல் இருத்தல்
 

67. வேறு வகைகளில் பயன்படுத்திய பிறகு, எஞ்சியதைக் கடவுளுக்கு அளித்தல்
 

68. ஸந்நிதிக்குப் பின்புறத்தில் அமர்ந்திருத்தல்
 

69. ஆலயத்துள், பிறரை வணங்குதல்,
 

70. ஆலயத்தில் கண்ட தனது ஆசிரியரைக் காணாதது போல் இருத்தல்
 

71. தற்பெருமை பேசுதல்
 

72. எந்த ஒரு ஆலயத்தையும் சார்ந்த எந்த ஒரு தேவதையையும் இழிவு படுத்திப்பேசுதல்

Friday, November 29, 2013

இந்து சமய விரதங்கள்

      
       இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதிச் செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.

வரைவிலக்கணம்
"மனம்பொறிவழிபோகாதுநிற்றற்பொருட்டு,உணவை விடுத்தெனுஞ் சுருக்கியேனும் மனம்,வாக்குகாயம்
என்னும் மூன்றினாலும்கடவுளைமெய்யன்போடு
வழிபடுதல் விரதமாகும்."

எண்வகை விரதங்கள்
  1. சந்தாபண விரதம்
  2. மஹாசந்தாபண விரதம்
  3. பிரசமத்திய (அ) கிரிச்சா விரதம்
  4. அதிகிரிச்சா விரதம்
  5. பராக விரதம்
  6. தப்த கிரிச்சா விரதம்
  7. பதகிரிச்ச விரதம்
  8. சாந்தாராயன விரதம்
இருபத்தியேழு வகை விரதங்கள்
இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை,
  1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.
  2. தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  3. பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  4. எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.
  6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  8. மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  9. மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  10. மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  11. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  12. மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  14. ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  15. ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  16. ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  17. ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
  18. ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  19. ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.
  21. ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
  22. ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  23. ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  24. இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.
  25. முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.
  26. மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  27. வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.
- இந்த உபவாச விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா? உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.
இந்துமதத்தில் இருக்கும் பல்வேறு கடவுள்களுக்கும் பல விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை கடவுள் வழிபாட்டிற்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.
   
விநாயக விரதங்கள்
சிவ விரதங்கள்
சக்தி விரதங்கள்
கந்த விரதங்கள்
விட்ணு விரதங்கள்
ஏகாதசி விரதம்

தினசரி ஹோரைகள்

தினசரி ஹோரைகள்

       ஹோரைகள் என்பது ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்ட ஒரு நாளின் ஒரு மணி நேர கால அளவு ஆகும்.

ஒரு வாரத்தில், சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் நேரம் தொடங்கி ஏழு நாட்கள் உள்ளன. ஒரு மணிக்கு ஒரு கிரகம் வீதமாக இந்த ஒவ்வொரு நாளையும் (24 மணி நேரம்) ஏழு கிரகங்கள் ஆட்சி செய்கின்றன.

ஆளும் கோள்களின் தன்மையைப் பொறுத்து ஹோரைகள் பல்வேறு பணிகளுக்கு பொருத்தமானதாகவோ அல்லது பகையானதாகவோ உள்ளன. இதன் மூலம் ஒரு காரியம் செய்யப் பொருத்தமான நேரத்தைனைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்தலாம். பின்வரும் ஹோரைகள் விளக்கப்படம், ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்தெந்த கோள்கள் ஆளுகின்றன எனக் காட்டுகிறது.

ஹோரைகளைக் பார்க்கும் போது, உங்கள் இடத்தின் அன்று சூரிய உதயம் நேரம் அறிந்து அதிலிருந்து முதல் 1 மணி நேரத்தினைக் கணக்கிட்டுக் கொள்ளவும். சூரிய உதய நேரத்தை பஞ்சாங்கம் மூலமாகவோ. பத்திரிகைகள் வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம்.


சுப கிரக ஹோரைகள் : சந்திரன், புதன், குரு, சுக்கிரன்

பாப கிரக ஹோரைகள் : சூரியன், செவ்வாய், சனி


சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை
மணி ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
6 - 7 சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி
7 - 8 சுக்கிரன் சனி  சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்  குரு
8 - 9 புதன்  குரு சுக்கிரன் சனி  சூரியன் சந்திரன் செவ்வாய்
9 - 10 சந்திரன் செவ்வாய் புதன்  குரு சுக்கிரன் சனி  சூரியன்
10-11 சனி  சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்  குரு சுக்கிரன்
11- 2 குரு சுக்கிரன் சனி  சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் 
12 - 1 செவ்வாய் புதன்  குரு சுக்கிரன் சனி  சூரியன் சந்திரன்
1 - 2 சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்  குரு சுக்கிரன் சனி 
2 - 3 சுக்கிரன் சனி  சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்  குரு
3 - 4 புதன்  குரு சுக்கிரன் சனி  சூரியன் சந்திரன் செவ்வாய்
4 - 5௦ சந்திரன் செவ்வாய் புதன்  குரு சுக்கிரன் சனி  சூரியன்
5 - 6 சனி  சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்  குரு சுக்கிரன்


சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரை
மணி ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
6 - 7 குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்
7 - 8 செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன்
8 - 9 சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி
9 - 10 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு
10-11 புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய்
11-12 சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன்
12 - 1 சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன்
1 - 2 குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்
2 - 3 செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன்
3 - 4 சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி
4 - 5௦ சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு
5 - 6 புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய்