Pages

Tuesday, July 19, 2016

வாஸ்து சாஸ்திரம்

கட்டிடக் கலை

சித்திரையில் கட்டிடம் துவங்கினால் நோய்வாய்ப்படுவான்;
வைகாசியில் தொடங்குபவன் செல்வத்தைப் பெறுவான்.
ஆடியில் தொடங்குபவனுக்கு நிறைய வேலையாட்கள் கிடைப்பர்.
மார்கழி தானியத்தையும், மாசி செல்வத்தையும்,
பங்குனி நன்மக்கட்பேற்றையும் அளிக்கும்.
ஆனி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி,
தை மாதங்கள் கட்டிட வேலை
ஆரம்பிக்க உகந்த மாதங்கள் அல்ல.

அச்வினி, ரோஹிணி, மூலம்,
உத்திரம், உத்திராடம்,
உத்திரட்டாதி, மிருகசீரிஷ
நக்ஷத்திரங்கள் உகந்தவை.
ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில்
கட்டிடம் கட்ட ஆரம்பிக்கக்கூடாது."

மனிதர்களுக்கு இராஜயோகம் தரும்
திசை எந்த மனையாக இருந்தாலும்,
அந்த மனையின் நான்கு திசை அதிபர்களை
அறிந்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப
கட்டடத்தை வடிவமைக்க வேண்டும்.
இது எல்லா திசை மனைகளுக்கும்
பொதுவானதே
.
கிழக்கு திசைக்கு இந்திரன் .
மேற்கு திசைக்குவருண தேவன் .
வடக்கு திசைக்குகுபேரன்.
தெற்கு திசைக்குஎமதர்மன்
அதைபோல திசைகளின்
நான்கு மூலைகளுக்கும் அதற்குரிய திசை தேவன்கள் உண்டு
வடகிழக்குக்கு ஈசான்யன். அதனால் அது ஈசான்ய மூலை .
தென்கிழக்குக்குஅக்னி தேவன். அதனால் அது அக்னி மூலை .
தென்மேற்குக்குநிருதி தேவன். அதனால் அது நிருதி மூலை .
வடமேற்குக்குவாயு தேவன். அதனால் அதுவாயு மூலை.
இப்படியாக ஒவ்வோரு திசைக்கும் அதன் ஒவ்வோரு மூலைக்கும்
தேவதைகள் அதிபதிகள் உண்டென வாஸ்துகலை சாஸ்திரம் சொல்கிறது .
இவர்களின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுத்தும் போதுதான், அதனால் உண்டாகும்
பிரச்சனைகளை வாஸ்துகுறை வாஸ்துதோஷம் என்கிறோம் .
குறிப்பாக
கிழக்கும்மேற்கும் ஆண்களுக்குரிய திசை
வடக்கும் தெற்கும் பெண்களுக்குரிய திசை
Top of Form