Pages

Sunday, November 14, 2010

உங்கள் காதல் உங்களுக்கு எப்படி


---------------------------------------------

 ஜோதிடம் காதலுக்கு எதிரி இல்லை, அதே சமயத்தில் ஜோதிடம் பார்த்துதான் காதலிக்க வேண்டும் என்று சொல்லவில்லை பொதுவாக காதலுக்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் உண்டு, உங்களுக்கும் காதலுக்கும் எப்படிப்பட்ட சம்பந்தம் உண்டு என்பதை சொல்வதே என் நோக்கம், ஜோதிடம் உண்மையை தான் சொல்லும் , உங்கள் உண்மையான காதலுக்கு மிகவும் உதவியாக இருக்கும், 

 

காதலிப்பவர்கள் முதலில் நீங்கள் காதலிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் சரியானவரை தான் காதலிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம் .காதலிப்பது யார் வேண்டுமானாலும் யாரைவேண்டுமானாலும் காதலிக்கலாம். ஆனால் உங்கள் கருத்துக்கு உங்கள் காதல் வாழ்வு சம்பந்தபட்டதா அல்லது வால்வு சம்பந்தபட்டதா என்பதை அறியும் முன் உங்கள் காதலுக்கும் உங்களுக்கும் எத்தனை துரம் என்று தெரிந்து கொள்ளுங்கள், காதல் நல்லவர்களுக்கும் வரும், கெட்டவர்களுக்கும்வரும்.  30 நாளில் காதல் முடிந்து போவதும் உண்டு.  30 வருடம் காதல் கல்யாணம் செய்து கொள்பவர்களும் உண்டு. பொதுவாக காதலிப்பவர்கள் ஏழரைசனி வரும் போது தான் காதலிக்கிறார்கள். பலரும் அஷ்டமத்துசனி, அர்தாஷ்டமசனி வரும்போது காதலிக்கிறார்கள்.பொதுவாக தசாபுக்தி சரி இல்லாத காலக்கட்டத்தில் தான் காதலிக்கிறார்கள்.


சரிஇல்லாத தசாபுக்தி, சரி இல்லாத நேரத்தில் காதலிப்பவர்களின் காதல் நீடிக்காது.  சனி இருக்கும் வரை காதலிப்பார்கள். அது முடிந்தவுடன் காதலும் முடிந்துவிடும்.  அதன்பிறகு ஒரு தெளிவு வரும் .மோசமான தசாபுக்தி இல்லாத காலக்கட்டத்தில் காதலிப்பவர்களின் காதல் மட்டுமே நீடிக்கும் .அந்தக்காதல் தான் கடைசி வரை நீடிக்கும். அவர்கள் கணவன் –  மனைவியாகி நல்ல குழந்தைகளைப் பெற்று கடைசிவரை அதே காதலோடு வாழ்ந்து வருகிறார்கள். இதே சனி திசையில் வரும் காதல், மோசமான நேரத்தில் வரும் காதல் சரியா காதல்லகாது அதனால் எந்த தசை நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதைப்பொறுத்து காதல் நீடிக்குமாநீடிக்காதா என்பதை தீர்மானிக்க வேண்டும். காதலிக்கும் போது கண்ணே, மணியே என்று கொஞ்சிக்கொண்டு, கல்யாணத்திற்குப்பிறகு பார்க்கக்கூடப்பிடிக்காமல் விலகிப்போகுபவர்களையும் நாம் பார்க்கிறோம். எந்த காலக்கட்டத்தில் நமக்கு காதல் உருவாகிறது என்பதைப்பார்த்து அந்தக்காதல் எப்படி முடியும் என்பதை நிச்சயமாகக்கூறலாம்.

உங்கள் ராசிப்படி உங்கள் காதல் எப்படி இருக்கும் ?.

மேஷம்

இவர்கள் காதலில் கதாநாயகனாக திகழ்வர்.ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும் படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்கவிடாமல் தடுக்கும்.ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார். இவர்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட நபர்களை காதலிப்பார்கள்இவர்கள் காதலரருக்கு கட்டுபடுவார்கள், மேலும் இவர்கள்காதலர் மிகுந்த பொறுப்பு உடையவராக இருப்பார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழவைப்பதில் கில்லாடி .இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார். தங்கள் அழகை பார்த்து தாங்களே பெருமைபட்டு  கொள்வார்கள் நீங்கள் ஒருவரை காதலித்தால் அவருக்கு உண்மையாக இருபீர்கள், காதல்  திருமணம் ஆனவர்கள். இவர்கள் காதலர்கள் கோபகாரர்கலாகவும்  அறிவுபுர்வமானவர்களாக இருப்பார்.

மிதுனம்

மிதுனராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு பேச்சாற்றல் அதிகம் இருக்கும் அதிகரசிகர்கள் இருப்பர். மிதுனராசிக்காரர்கள் தங்களைத்தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். இவர்கள் நிறைய ஒரு தலைபச்சமாக காதலிப்பார்கள்  எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. உறுதியான காதல் இருக்காது மிதுனராசிக்காரர்களுக்கு துலாம்ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை தனுசு மற்றும் மேஷராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் காதலை பற்றி பேசுவார்கள் ஆனால் காதலை ஒரு விலை பொருளாகவே மட்டும் தான் நினைப்பார்கள். இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடகராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுயமரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடகராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழவாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். இவர்கள்காதலை ஒரு சாதாரண விசயமாக தான் நினைப்பார்கள் கடகராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

சிறிய வயதில் காதலிக்க தொடங்கி அநேக நபர்களை காதலிக்கும் தன்மை கொண்டவர்கள்சிம்மராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிகமிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவர் இருக்க ஒருவரை காதலிக்கும் எண்ணம் கொண்டவர்கள். இவர்களுக்கு எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக்கொள்ளமாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்மராசி பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்மராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன்பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்மராசிக்காரர்கள் திறமையாக செயல் படமாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும், காதலில்  வயது வித்யாசம் பார்க்க மாட்டார்கள் இவர்கள் தனுர்மற்றும்  மிதுனம் போன்ற ராசிகரர்களை மிகவும் நேசிப்பார்கள் மொத்தத்தில் சிறு காதல் பிரியர்.


கன்னி


கன்னிராசி உள்ளவர்கள்  காதல் மர்மமாக இருக்கும் ஆனால் காதல் தோல்வி அடைவார்கள். காதலில் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல் படுபவர்.காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள்கொடுக்கல், வாங்கல்  விஷயத்தில் விருப்பமுடையவர்கள் .இந்தராசி இருப்பவர்கள் நல்லகுனம் உடையவர்கள். ஆனால் இந்தகுணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்கமாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை மனதுக்குள்ளேயே வைத்துகொள்வார்கள் விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகரராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக்கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும். தன சுயநலத்திற்காக காதல் விசயத்தில் ஏதையும் செய்வார்கள்.


துலாம் 


எப்போதும் அடாவடியாக பேசிக்கொண்டிருக்கும் துலாம்ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத நிலையில் திடீர் காதல் கொள்வர்.  இவர் காதலர்இவருடைய காதல் என்னத்தை விட தீவிராமான காதல் எண்ணம் கொண்டவராக இருப்பார்.  இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால்  காதல் இவர்களுக்கு கைவந்தகலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்துகொள்வது உகந்தது அல்ல. காதல்திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. காதல் எண்ணத்தால் அதிக மயக்கம் கொள்வர். துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது .விருட்சிகராசிக்காரருடன் துலாம்ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச்சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு முதல் காதல் பாடத்தையும் அடுத்தகாதல் அனுபவத்தையும் தரும். தம் காதலில் தோற்ற அடையாளமே இல்லாமல் வாழ்வார்கள்.


விருச்சிகம்


விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதைவிட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர் .தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக்கொண்டு ஒரு சிறந்தமனிதராக இருப்பார்fs;, இவர்கள் பெண்களை பார்ப்பதைவிட, பெண்கள் இவர்கள் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும் இவர்கள் காதலிப்பது பிறருக்கு தெரியாதவண்ணம்  பார்த்துகொள்வார்கள். வெளி தோற்றத்தில் இவர்கள் காதலிப்பதை பிறர் அறிய முடியாது. இவர்கள்  தனிமையில் அதிக காதல் எண்ணம் கொண்டவர்கள்.இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும்.தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்fs;.  எப்போதும் உற்சாகமாக இருப்பார்fs; .காதல் மற்றம் தாம்பத்யவாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார்.இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர். இவர்களின் முதல் காதலை விட  இரண்டாவதாக காதலிப்பவர் தான் அறிவுபூர்வமாக இருப்பார். இவர்கள் மீனம் மற்றும் மகாரராசிகாரர்களால் அதிகம் நேசிக்கபடுவார்.


தனுசு


இவர்கள் இவர்கள்  காதலில் வெற்றியும் தோல்வியும் அடையும் போது  அதன் பாதிப்பு அதிகம் இருக்கும் காதலுக்கு முக்கியம் கொடுக்கும் அதே சமயம் திருமணம் செய்யும் வாழ்க்கை துணையை அதிகம் நேசிப்பார்கள், காதலிக்கும் காலத்தில் சுயமரியாதை பார்க்காதவர்கள் திருமனத்திற்கு பின் சுயமரியாதைபார்பார்கள். காதலில்திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும்.காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவாரfs;. காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின் பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.

மகரம்

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மானாசிக காதல் அதிகம் இருக்கும். மகரராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவு தான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. பெரும்பாலும் இந்தராசிக்காரர்கள் காதலில் வெற்றிபெறுவது பெரிய விசயம், காதலுக்கு இவர்கள் தரும் முக்கியத்துவம் போல் இவர்களின் காதலர்கள் தர மாட்டார்கள் யாரையும் எளிதில் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகரராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது, மொத்தத்தில் மென்மையான காதல் இவர்களுடையது


கும்பம்


கணகிட்ட காதல் இவர்களுடையது. கும்பராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல் தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப்பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். ஒரே நேரத்தில் மனதுக்குள் நான்கு திசைகளிலும்ஓடவிடுவார்கள், இவர்களுடைய கற்பனை மிகவித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். உங்களுக்கு காதல் விசயத்தில் மனக்கணக்கு அதிகம் இருக்கும், கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம். உங்களுக்கு குடும்பம் உறவினால் காதல்  மறைந்துவிடும்.

மீனம்

நிலைஅற்ற  காதலை உடையவர்கள், நேரில் காட்டும் அற்புதமான பேச்சு உங்கள் காதலர் விசயத்தில் முடியாது, மீனராசிகாரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலை பெற்றிருப்பதில் மீனராசிக்காரர்களின் மனம் எப்பொழுதும் காமஇச்சை கொண்டதாகவே இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்கள் இவர்களை நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக்காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக்காரர் உணர்ச்சியை தரக்கூடிய செயல்களை செய்பவர் .தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்  கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னிராசிக்காரர்களுடன் விருச்சிக ராசிகாரர்களுடன் காதல் ஏற்ப்படும்.


குறிப்பு

அகம் புறம் என்று இருக்கும் மனித வாழ்வில் காதல் ஒரு முக்கியமான விசயம்தானே, அந்த காதல் எப்படிபட்டது என்று தெரிந்து கொள்வது அவசியம், மேற்சொன்ன காதல் பற்றிய ஜோதிட கருத்துகள்யாவும் பொதுவானவையே, உங்கள் ஜென்ம ஜாதகம் மற்றும் திசாபுத்தி படி பலன்கள் மாறுபடும்.


Thursday, November 4, 2010

இறைவன் இருபவரா இல்லாதவரா என்ற தன்மையை எப்படி கண்டறிவது.


இருக்கிறார் என்பவனுக்கு இருக்கும் தன்மையாகவும் இல்லைஎன்பவனுக்கு இல்லாத தன்மையாகவும் இருக்கிறார் .
விஞ்ஞானம் பேசுபவன் மூளையில் அஞ்ஞானம் உறைந்து போயிருக்கும் ,அதனால் ஏற்பதில்லை. ஆனால் அஞ்ஞானம் பேசுபவன் மூளையில் விஞ்ஞானம் ஊறிருக்கும் அதனால் ஏற்கின்றான்.
ஒரு கண்ணால் பார்க்கும் காட்சியை விட இரு கண்களாலும் பார்க்கும்காட்சியில் உண்மை தெளிவாக இருக்கும்.
கடவுள் இருக்கிறார் ஆனால் எப்படி இருக்கிறார் என்ற கேள்வி தான் நியாயமாக எழவேண்டும்.
நீங்கள் எத்தகைய விசயத்தை நேசிக்கிரிர்களோ அத்தகைய விசயமாகஇருக்கிறார்.
நீங்கள் எதன் மீது உண்மையான அன்பு வைத்து இருகிருர்களோ அதில்இருக்கிறார் .
உங்களின் விருப்பமாக இருக்கிறார்.
உங்களின் கொள்கையாக இருக்கிறார்.
உங்களின் கடமையாக இருக்கிறார்.
உங்களின் உரிமையாக இருக்கிறார்.
உங்களின் காதலாக இருக்கிறார்.
இப்போது கூறுங்கள் கடவுள் இருகிறாரா இல்லையா.
நீங்கள் நேசிபவர்களை உண்மையாக நேசியுங்கள்.
உங்களின் கடமைகளை சரியாக செயுங்கள்.
உங்களின் உரிமைகளை முறையாக பெறுங்கள்.
உங்களின் கொள்கைகளை கனிவாக கூறுங்கள்.
இப்படி முழுமை பெற்ற மானிட தன்மையே கடவுள் எனப்படும்.
உங்களுக்குள் இருக்கும் இறைவனை வெளியில் தேடாதிர்கள், தேடும் இடங்கள் யாவும் ஒரு வகையில் உன்ங்கள் மனதை குழப்புவதாக தான் இருக்கும், குழம்பி இருக்கும் மணதால் இறைவனை உணரமுடியாது.
உணர முடியாத ஊனமாக இருந்தால் உங்களால் இறைவனை உணரமுடியாது.
ஒன்றை கொடுத்து ஒன்றை பெரும் நிலையில் இல்லை இறைவன், ஆனால் எதனை கொடுத்தாலும் பெற முடியாத நிலையில் இருபதே இறைதன்மை (பொருள், உணர்வு, உயிர்).
உங்கள் காதல் கைகூடவில்லை என்பதற்காக உலகில் காதலேஇல்லை என்று எப்படி கூரமுடியும் - உங்கள் நண்பன், உங்கள் சகோதரன், சகோதரிகள் போன்ற பிறருக்கு காதலர்கள் இருக்கிறார்களே - இதைஎன்னவென்று கூருவாய்.
காதல் எப்படி சிலருக்கு அடைந்த, சிலருக்கு அடையாத விசயமாகஇருகிரதோ அதே போல் தான் கடவுள் சிலருக்கு தெரிந்த சிலருக்கு தெரியாதவிசயமாக இருக்கிறார்.

Sunday, October 31, 2010

மன அமைதி

மன அமைதியின்மையால்

மனதை அமைதியாக வைத்திருப்பது என்பது கடினமான காரியம்தான். ஆனால் ஒருவர் தனது மனதை அமைதியாக வைத்திருப்பது மிக மிக அவசியமாகும்.
மனம் அமைதியாக இல்லாவிட்டால் எந்த வேலையிலும் ஈடுபட முடியாது. எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது.
திடீர் திடீர் என்று கோபம் வரும் - மிக நெருங்கியவர்கள் மீது அந்தக் கோபத்தைவிட வேண்டிவரும். அதனால் அருகில் நெருக்கமாக உள்ளவர்கள் எல்லாம் பகைவர்களாக மாறுவார்கள்.


மன அமைதி இல்லாதபோது அறிவு தடுமாறும். எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியாது. முடிவு எடுத்தாலும் தவறானதாகவே முடிந்து விடும்.
மன அமைதி இன்மையால் உறக்கம் வராது. பலர் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு உறங்குவதற்கு மன அமைதி இன்மையே காரணமாகும்.
மன அமைதி இன்மை உறக்கத்தைக் கெடுப்பதோடு உடல் நலனையும கெடுக்கும். குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எந்த நோயும் உடம்பில் இருக்காது, ஆனால் உடல் நலமாக இருக்காது.


மன அமைதி இன்மை புகை, மது, மங்கை என்ற தவறான வழிகட்கு எல்லாம் இட்டுச் செல்லும் - பல குடும்பங்கள் அழிந்தது - அழிவது எல்லாம் - ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் மன அமைதி இன்மையே அடிப்படைக் காரணமாகும்.
மன அமைதி இல்லாதவர்கள் மனம் விட்டு சிரிக்கவும் முடியாது. எப்போதும் முகம் இருளடைந்தே இருக்கும். அதனால் மன அமைதியின் இன்றியமையாமையைப் புறக்கணிக்காமல் எச்சரிக்கையாக இருந்து அமைதியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.



மன அமைதி கெடக் காரணங்கள்

இரண்டு வகையில் மன அமைதி கெடுகின்றது. ஒன்று ஒருவன் தனது எண்ணங்களால், பேச்சால், செயல்பாடுகளால் மன அமைதியை இழந்து விடுதல்.
இரண்டு மற்றவர்களால், மன அமைதி இழத்தல். ஆக நம்மாலும் மற்றவர்களாலும் இந்த இரண்டு வகையாலும் மன அமைதி கெடுகின்றது.


தன் செயல்

ஒரு சிலர் தாங்கள் அறியாது, ஆராயாது, ஆசை காரணமாகச் செய்கின்ற செயல்களின் விளைவினால் மன அமைதியை இழக்கிறார்கள். இவர்கள் தங்கள்தவறுகளைப் புறக்கணித்த போதும் மனசாட்சி இடைவிடாது உறுத்திக்கொண்டே இருக்கும். அதனால் மன அமைதியை இழப்பர்.


யாரையேனும் கடுமையாகப்பேசிவிட்டு வருந்துதல்; தனக்கு இருக்கும் செல்வாக்கால் வரம்பு மீறிய செயல்களைச் செய்து விட்டு வருந்துதல், இவைகள் எல்லாம் மன அமைதியை கெடுத்து விடுகின்றன.


சிலர் வீண் செலவு செய்து விட்டு வருந்துதல், நேரத்தை வீண்டித்துவிட்டு வருந்ததல் இதுபோன்ற செயல்களால் அமைதியை இழந்து தவிப்பதும் உண்டு.


பிறரால் மன அமைதி கெடுதல்

பலர் மன அமைதியை இழப்பதற்கு அவர்களோடுதொடர்புடையவர்கள் காரணமாக இருப்பார்கள். மன உறுதி இல்லாதவர்கள் பிறரால் மன அமைதி கெடுவதே அதிகமாகும். குடும்பத்தில் இருந்தே இந்தச் சிக்கல்கள் தொடங்குகின்றன. குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை, வீட்டில் உள்ளவர்கள் சொன்னபடி கேட்கவில்லை, குடும்பத்தில் அளவிற்கு மீறிய செலவினங்கள் - இப்படி ஏதேனும் ஒரு காரணம் பெற்றோரின் மன அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
சிலர் தம் தாட்சண்யம், கருணை காரணமாகவே மன அமைதியை இழந்து விடுகிறார்கள். பாவம் என்று வேலை தெரியாதவனை ஒரு வேலைக்கு வைத்துக்கொள்ளுதல், பாவம் என்று உதவி செய்துவிட்டு அது திரும்ப வராதபோது மன அமைதியை இழத்தல் - அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுத்து விட்டு அதனை வசூல் செய்யாதபோது மன அமைதி இழந்து விடுதல் - ஒருவரை நம்பி மோசம் போனபோது மன அமைதியை இழத்தல் - இப்படிச் சிலர் மன அமைதியை இழந்து விடுகின்றனர்.
தொழில் செய்யும் இடத்தில் தேவையில்லாததைப் பேசி அதனால் ஏற்படும் துன்பத்தால் மன அமைதியை இழப்பவர்கள் உண்டு. அவசரப்பட்டு ஏதோ சொல்வதும் சில செயல்களைச் செய்வதாலும் விளைவு வேறாக வரும்போது மன அமைதி போய்விடுகிறது.


வீட்டில் அமைதி இல்லாதவர்களால் தொழில் செய்யும் இடத்தில் அமைதியாக இருக்க முடியாது. தொழில் செய்யும் இடத்தில் அமைதியை இழந்தவர்கள் வீட்டில் அமைதியைக் கெடுத்து விடுவார்கள். எல்லோரும் இழந்த அமைதியை மீண்டும் தேடி அலைகிறார்கள் என்பதுதான் உண்மை. அமைதி என்பது வெளியில் இல்லை. அது நம்முள்ளேதான் இருக்கிறது. அதைக் கண்டறிந்து நாம்தான் பாதுகாக்க வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும்.



காரணம் கண்டறியுங்கள்

ஒரு தாளை எடுங்கள், உங்கள் அமைதி கெட்டதற்குரிய காரணங்களை வரிசைப்படுத்துங்கள். அமைதியாக இருந்த நாட்களை எண்ணிப் பாருங்கள். அதற்குப் பிறகு எப்போதிலிருந்து, எப்படி அமைதி கெட்டது என்பதற்குரிய காரணங்களை கண்டறியுங்கள். வரிசைப்படுத்துங்கள்.


1.
யாரேனும் உங்களைப்பற்றித் தவறாகப் பேசியதால் நீங்கள் அமைதியை இழந்திருக்கலாம்.


2.
நீங்கள் வாங்கிய கடனைத்திரும்பக் கேட்டபோது உங்கள் அமைதிக்குப் பாதிப்பு நேர்ந்திருக்கலாம்.


3.
நடக்க வேண்டிய காரியங்கள் சரியாக, சீராக நடக்கவில்லையானாலும் நீங்கள் நினைத்தக் காரியம் நினைத்தபடி நடக்கவில்லையானாலும் அமைதி இழக்கும் நிலை ஏற்படும்.


4..
நீங்கள் அன்பு செலுத்தியவர்கள் உங்களைப் புறக்கணித்த போது அமைதியை இழந்திருக்கலாம்.


5.
ஒரு பொருளை வாங்க எண்ணி முடியாதபோது, ஒரு பதவியை அடைய முயற்சித்துத் தோல்வி அடைந்தபோது அமைதியை இழந்திருக்கலாம்.


6.
உங்கள் குழந்தைகள் தவறான பழக்கத்தற்கு அடிமையாகி விட்டமை அறிந்தபோது அமைதியை இழந்திருக்கலாம்.


7.
அநியாயமாகச் செயல்கள் நடைபெறுகின்றபோதும், அதனால் தனிப்பட்ட முறையில் நீங்கள் பாதிக்கப்பட்ட போதும் அமைதியை இழந்து இருக்கலாம்.


8.
உடல் நலக்குறைவு, தீராத நோய், உடல் ஊனம் போன்றவைகளும் மன அமைதியைக் குலைத்து விடும்.


9.
காதல் தோல்வி - இது போன்ற உள்ளார்ந்த செயல்பாடுகளால் அமைதியை இழக்க நேரிடலாம்.
10.
நாட்டின் நிலையை நினைத்து சிலர் அமைதியை இழப்பதும் உண்டு.
இத்தகைய இவை போன்ற பல காரணங்களால் நம் மன அமைதிக்கு பாதிப்பு நேர்வதுண்டு எதனால் என்று கண்டறிந்து அதை நீக்க முயற்சிக்க வேண்டும். அதுவே மன அமைதியை மீண்டும் பெறுவதற்குரிய சிறந்த வழியாகும்.
அமைதியை வளர்த்துக் கொள்ள சில விதி முறைகள்.


1.
நல்ல பழக்க வழக்கங்கள்.

முறையான பழக்க வழக்கங்கள் அமைதியை நல்கும். நமது முறையான பழக்க, வழக்கங்களே - அதிகாலையில் எழுதல், குளித்துவிட்டுப் பணிகளுக்குச் செல்லல் போன்ற சிறு சிறு செயல்கள்தாம் நம் குழந்தைகளின் நல்ல பழக்கத்திற்கு நிரந்தர பாடமாக அமைகின்றன.
தநதை தாம் புகை பிடிப்பதை அங்கீகரித்துக் கொள்கிறார். தன் மகன் புகை பிடிக்கும்போது மன அமைதியை இழந்து விடுகின்றார். காரணம் மகனைத் திருத்தும் தகுதியை அவர் இழந்துவிடுகிறார்.


2.
நேர்மையாக நடந்துகொள்ளுதல்

முடிவதை முடியும் என்றும் முடியாத்தை மறுத்துவிடுதலும் அப்போதைக்குச் சிரமாக இருந்தாலும் நாளடைவில் மன அமைதி கிட்டும். இல்லாவிடின் மன அமைதி கெட்டுவிடும். முறை தவறி, தாட்சண்யம் கருதிச் செய்வதால் பலர் துன்பத்திற்கு ஆளாகி மன அமைதியை இழந்து விடுகின்றனர்.


நல்ல நண்பர்கள் சேர்க்கை

நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பெரும் பேறாகும். நல்ல நண்பர்கள் இருக்கும்போது தீய சிந்தனைக்கோ, தீய பேச்சுக்களுக்கோ இடமில்லை. தீமையில்லாதபோது அமைதி நிலைபெறுகிறது. நல்ல நூல்களும் மன அமைதிக்கு வழி வகுக்கிறது.


மன்னிக்கும் மனப்பான்மை

பிறர் செய்யும் சில குறைகளை - பொறுத்துக் கொள்ளவும் - சில குறைகளை மன்னிக்கவும் - சிலவற்றை முழுமையாக மறந்து விடவும் கற்றுக் கொள்வதால் பலரது அமைதி பாதுகாக்கப்படுகிறது.



தியானம்

தியானப் பயிற்சியால் மனம் கட்டுப்படுத்தப்பட்டு அமைதி காக்கப்படுகிறது; தியானப் பயிற்சி - முறையாக - நீண்ட நாள் - தொடர்ந்து செய்தால் அன்றிப் பயன் நல்காது. ஈடுபாடு இல்லாத தியானத்தாலும் பயனில்லை.


இறையருள்
சில வகையான துன்பங்கள் - விரைவில் தீர்க்கமுடியாத - ஊனங்கள் அவமானங்கள் - மன அமைதியைக் கெடுத்து விடுவதுண்டு. அத்தகைய சூழலில் இறையருளை எண்ணி நமது கடமையைச் செவ்வனே ஆற்றுவதே மன அமைதிக்குச் சிறந்த வழியாகும். அறிவுக்கும் அப்பாற்பட்டு - காரணம் காணவே முடியாத சில துன்பங்களுக்கு இறையருள்தான் வழிகாட்ட வேண்டும். அந்த நம்பிகையோடு செயல்படுவதுதான் மன அமைதிக்கு சிறந்த வழியாகும்.


ஈடு செய்தல்

நாம் அறிந்தோ அறியாமலோ சில தவறுகளைச் செய்து இருப்போம். அதற்குப் பிராயச்சித்தமாக - அதற்கு ஈடுசெய்யும் வகையில் - இசல நன்மைகளைச் செய்யும்போது நமக்கு மன அமைதி ஏற்படுகின்றது.
இது ஒரு வகை. மற்றொரு வகை நாம் செய்யாத ஒரு தவறுக்காக தண்டனை ஏற்க வேண்டிவரும். அப்போது, நமக்கு இப்போது ஏற்பட்டுள்ள துன்பம் ஏற்கனவே செய்த தவறுக்கு உரியது என்று சமநிலைப்படுத்திக்கொண்டால் அமைதியை இழக்க நேரிடாது.


மன அமைதியும் மன உறுதியும்

மன அமைதியும் மன உறுதியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனதை அமைதியாக வைத்திருப்பவர்கள் எந்தக் காரியத்திலும் மன உறுதியுடன் இருப்பார்கள். அதேபோல் மன உறுதியுடன் இருப்பர்கள் ஒருபோதும் மன அமைதியை இழக்கமாட்டார்கள்.


மாறாக ஒன்றை இழந்தால் மற்றொன்றையும் இழந்துவிட நேரிடும், ஆகவே ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக விளங்கும் இரண்டையும் ஒரு சேரப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.


இந்த இரண்டு தன்மைகளையும் பாதுகாக்கவும் வளர்த்துக்கொள்ளவும் எவ்வித முதலீடு தேவை இல்லை. பொருட் செலவும் செய்ய வேண்டுவதில்லை. உணர்ச்சி பூர்வமாக இருப்பதை விடுத்து அறிவு பூர்வமாகச் சிந்தித்து நம்மை நாமே சரிசெய்துகொள்வதுதான் நாம் செய்ய வேண்டிய செயலாகும்.
சிலரைப் பாருங்கள். எப்போதும் சிரித்த முகத்துடனேயே செயலாற்றுவார்கள். அவர்களுக்கு நம்மைக் காட்டிலும் அதிகமாப் பொருளாதாரப் பிரச்னைகள், தீர்க்கமுடியாத குடும்ப பிரச்சினைகள். பல்வேறு வெளி விவகாரங்கள் என்று பல இருக்கும்.


அவற்றை அவர்கள் அணுகும் முறை - அவற்றைக் கையாளும்முறை - அவற்றைச் சீரணிக்கும் முறை - அவற்றை ஏற்றுக்கொள்ளும் முறை இவற்றை உற்றுக் கவனித்தால் - உண்மை விளங்கும். நாம் எந்த அளவுக்கு - இந்த அணுகு முறைகளில் குறைபாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பது விளங்கும்.