Pages

Thursday, November 4, 2010

இறைவன் இருபவரா இல்லாதவரா என்ற தன்மையை எப்படி கண்டறிவது.


இருக்கிறார் என்பவனுக்கு இருக்கும் தன்மையாகவும் இல்லைஎன்பவனுக்கு இல்லாத தன்மையாகவும் இருக்கிறார் .
விஞ்ஞானம் பேசுபவன் மூளையில் அஞ்ஞானம் உறைந்து போயிருக்கும் ,அதனால் ஏற்பதில்லை. ஆனால் அஞ்ஞானம் பேசுபவன் மூளையில் விஞ்ஞானம் ஊறிருக்கும் அதனால் ஏற்கின்றான்.
ஒரு கண்ணால் பார்க்கும் காட்சியை விட இரு கண்களாலும் பார்க்கும்காட்சியில் உண்மை தெளிவாக இருக்கும்.
கடவுள் இருக்கிறார் ஆனால் எப்படி இருக்கிறார் என்ற கேள்வி தான் நியாயமாக எழவேண்டும்.
நீங்கள் எத்தகைய விசயத்தை நேசிக்கிரிர்களோ அத்தகைய விசயமாகஇருக்கிறார்.
நீங்கள் எதன் மீது உண்மையான அன்பு வைத்து இருகிருர்களோ அதில்இருக்கிறார் .
உங்களின் விருப்பமாக இருக்கிறார்.
உங்களின் கொள்கையாக இருக்கிறார்.
உங்களின் கடமையாக இருக்கிறார்.
உங்களின் உரிமையாக இருக்கிறார்.
உங்களின் காதலாக இருக்கிறார்.
இப்போது கூறுங்கள் கடவுள் இருகிறாரா இல்லையா.
நீங்கள் நேசிபவர்களை உண்மையாக நேசியுங்கள்.
உங்களின் கடமைகளை சரியாக செயுங்கள்.
உங்களின் உரிமைகளை முறையாக பெறுங்கள்.
உங்களின் கொள்கைகளை கனிவாக கூறுங்கள்.
இப்படி முழுமை பெற்ற மானிட தன்மையே கடவுள் எனப்படும்.
உங்களுக்குள் இருக்கும் இறைவனை வெளியில் தேடாதிர்கள், தேடும் இடங்கள் யாவும் ஒரு வகையில் உன்ங்கள் மனதை குழப்புவதாக தான் இருக்கும், குழம்பி இருக்கும் மணதால் இறைவனை உணரமுடியாது.
உணர முடியாத ஊனமாக இருந்தால் உங்களால் இறைவனை உணரமுடியாது.
ஒன்றை கொடுத்து ஒன்றை பெரும் நிலையில் இல்லை இறைவன், ஆனால் எதனை கொடுத்தாலும் பெற முடியாத நிலையில் இருபதே இறைதன்மை (பொருள், உணர்வு, உயிர்).
உங்கள் காதல் கைகூடவில்லை என்பதற்காக உலகில் காதலேஇல்லை என்று எப்படி கூரமுடியும் - உங்கள் நண்பன், உங்கள் சகோதரன், சகோதரிகள் போன்ற பிறருக்கு காதலர்கள் இருக்கிறார்களே - இதைஎன்னவென்று கூருவாய்.
காதல் எப்படி சிலருக்கு அடைந்த, சிலருக்கு அடையாத விசயமாகஇருகிரதோ அதே போல் தான் கடவுள் சிலருக்கு தெரிந்த சிலருக்கு தெரியாதவிசயமாக இருக்கிறார்.

No comments:

Post a Comment